கேளிக்கை மையத்தில் திடீர் சோதனை

சுங்கைப்பட்டாணியில் வர்த்தக நோக்கில் அனுமதியின்றி பதிப்புரிமை படைப்புகளை பயன்படுத்திய கேளிக்கை மையம் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதிப்புரிமை மீறல் காரணமாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் கெடா மாநில இயக்குநர் அஃபெண்டி ரஜினி காந்த் தெரிவித்தார்.

சுங்கைப்பட்டாணியில் கடந்த சில மாதங்களாக கேளிக்கை மையங்களில் பதிப்புரிமைக்கு உரிய பாடல்கள் மற்றும் இசை போன்றவை சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் இடிப்படையில் (ரிம் ) எனப்படும் மலேசிய ஒலிப்பதிவு தொழில் துறை சங்கத்துடன் இணைந்து அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சோதனையின் போது பதிப்புரிமை பாதுகாக்கப்பட்ட பாடல்கள், அனுமதியின்றி சட்டவிரோதமாக கரோக்கி சாதனத்தில் பதிவேற்றம் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கேளிக்கை மையத்தில் 5,600 வெள்ளி மதிப்புள்ள மின்னியல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல்செய்து இருப்பதாக அஃபெண்டி ரஜினி காந்த் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்