கைலி கட்டும் நடைமுறை அறிமுகம்

கோலசிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் அலுவலகத்தில் அலுவல் கொண்டுள்ள பொது மக்கள், காற்சட்டை அணிந்த இருப்பார்களேயானால் அவர்கள் பாதுகாவலர் அறையிலேயே தடுக்கப்பட்டு, கால்களை மறைப்பதற்கு கைலி ஒன்று கொடுக்கப்பட்டு, அணியும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அந்த நகராண்மைக்கழக அலுவலக கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள பாதுகாவலர் ஒருவர், காற்சட்டை அணிந்துள்ள நபரை தடுத்து நிறுத்தி கைலி அணியுமாறு கேட்டுக்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காற்சட்டை அணிவதற்கு இனியும் அனுமதியில்லை என்று கூறி, கைலி ஒன்றை பாதுகாவலர் வழங்குவதையும், அதனை அந்த நபர் அணிவதையும் அந்த காணொளி காட்டுகிறது.

இதனிடையே கோலசிலாங்கூர் நகரண்மைக்கழக அலுவலகத்தின் இந்த புதிய நடைமுறையை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் சூ லிம் கண்டித்துள்ளார். பல்லின சமூக கலாச்சார கூறுகளை கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்