கையூட்டு பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது 10 குற்றச்சாட்டுகள்

நீலாய், மே 21-

நபர் ஒருவரிடம் 7,600 வெள்ளியை கையூட்டுப் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

41 வயது ரசாலி அஹ்மத் என்கிற அந்த குடிநுழைவு அதிகாரி, நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி வரையில் நீலாய், தாமான் செமராக் அருகிலுள்ள ஒரு வங்கியில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்