பெட்ரோல் நிலையத்தில் திடீர் உணவு சமைத்த நபர்களுக்கு அபராதம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ், மே 21-

பெட்ரோல் நிலையத்தில் மீ வகையை சேர்ந்த திடீர் உணவை சமைத்ததாக நான்கு பேர் பென்த்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

23 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் மாஜிஸ்திரேட் நட்ராத்துன் நாயிம் சைநாண் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்க மாஜிஸ்திரேட் நட்ராத்துன் நாயிம் உத்தரவிட்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 336 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். 

கடந்த மே 12 ஆம் தேதி கெந்திங் ஹைலேண்ட்ஸ் – சில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்