கையூட்டு பெற்றதாக முன்னாள் பொது மேலாளர் மீது குற்றச்சாட்டு

அயர் கெரோஹ், மே 14-

நிலம் விவகாரம் குறித்து பொய்யான ஆவணங்களை சமர்பித்து 64,550 வெள்ளி லஞ்சம் கேட்டதாக விவசாயிகள் அமைப்பின் முன்னாள் பொது மேலாளர் ஒருவர் அயர் கெரோஹ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

42 வயது முகமது ஜைரி யாஹ்யா என்கிற அந்த முன்னாள் பொது மேலாளர் நீதிபதி எலசபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி மலாக்கா, ஜாசின் , மேடான் செளேரா பெக்கான் செலன்டார் -ரில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்