போலியான மதுபானங்களை தயாரிக்கும் இடங்கள் சோதனை

ஜொகூர், மே 14-

ஜொகூர், பொண்டியன் அருகே கம்போங் பத்து 34 -விலுள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் போலியான மதுபானங்களை தயாரிக்கும் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு 1 மணியளவில் மேற்கொண்ட இச்சோதனையில் அடையாள ஆவணங்கள் இல்லாத அடிப்படையில் 27க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம் குமார் தெரிவித்தார்.

இச்சோதனையில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 265 வெள்ளி மதிப்பிலான 1,683 லீட்டர் மதுபானம், Toyota எஸ்த்திமா ரக கார், நான்கு போத்தல்கள் மூடும் இயந்திரங்கள், ஐந்து மின்சார பம்புகள், உட்பட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக குமார் கூறினார்.

அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத மதுபானங்கள் விற்பனை மற்றும் போலி மதுபானங்களை தயாரித்தல் ஆகியவற்றை போலீசார் தொடர்ந்து கண்காணித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குமார் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்