கைவிடப்பட்ட தங்கும்விடுதி விபச்சார மையமாக மாறியது

புடு, ஜாலான் பசார் பஹாருவில் கைவிடப்பட்ட தங்கும் விடுதியின் முதல் மாடியிலிருந்து நிர்வாணக் கோலத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவர் குதிக்க முயற்சித்தது தோல்வியடைந்தது.

30 வயதுடைய அந்நபர் Op Nada சோதனையின் போது போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்று மாடியிலிருந்து குதிக்க முற்பட்டபோது வெற்றிகரமாக காவல்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது அந்நபருக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற அச்சோதனையில் 263 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் கூறினார்.

பாகிஸ்தான், மியான்மார், இந்தோனேசியா, வியட்நாம், சீனா, தாய்லாந்து ஆகிய வெளிநாட்டினர்கள் உட்பட உள்நாட்டை சேர்ந்தவர்கள் என 229 ஆண்கள், 34 பெண்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ அல்லவுடீன் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 372B பிரிவின் கீழ் மற்றும் அரசு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததிற்காக குற்றவியல் சட்டம் 186 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டத்தோ அல்லவுடீன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்