பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கின

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளன. இப்பண்டிகையுடன் சேர்ந்து நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கும் திரும்புகின்றனர்.

சூங்ஙாய் பூலோ – விலிருந்து ரவாங் செலாத்தான் – கிற்கும் ரவாங் செலாத்தான்னிலிருந்து சூங்ஙாய் பூலோவிற்கும் வாகனங்கள் மெதுவாக நகர்வதுடன் Slim River – ரிலிருந்து Sungkai – கிற்கு செல்லும் பாதையிலும் போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் தாமதமாக செல்வதாக XPLUS அறிவித்துள்ளது.

25 ஆவது கிலோமீட்டரில் சாலை விபத்தின் காரணமாக Putrajaya – விலிருந்து Bandar Gamuda Cove வரையிலும் Skudai – யிலிருந்து Sedenak வரையிலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

Klang Valley -யிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் Bukit Tinggi – யை நோக்கி Genting Sempah செல்லும் வழி மட்டுமே வாகன நெரிசலில் பாதிக்கப்பட்டிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

மதியம் அல்லது மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு வலியுறுத்தப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்