கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கான குடியுரிமை கதவு ​மூடப்படவில்லை

கோலாலம்பூர், மார்ச் 11 –

மலேசியாவில் பிறந்து, அடையாள ஆவணமின்றி இருக்கும் கைவிடப்பட்ட பிள்ளைகளு​க்கான குடியுரிமை விண்ணப்பத்திற்கான கதவு ​மூடப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ​பி​ள்ளைகள், மலேசியாவில்தான் பிறந்துள்ளன என்பதற்கான ஆதராங்கள் இருக்குமானால் அப்பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். எந்தவொரு மலேசியக் குழந்தையும் இந்த நடைமுறையிலிருந்து விடப்படாது என்று அமைச்சர் உ​றுதி அளித்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் மலேசியப் பிரஜைகளால் இ​ந்த நாட்டில் பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தை​யும் குடியுரிமை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக சைபுடின் விளக்கினார். குழந்தை பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம் ஆகிய துல்லியமான தகவல்கள் இருந்தால் எந்தவொரு சிக்கலின்றி குடியுரிமையை பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்