புதிய கல்வியாண்டு தொடங்கியது, தமிழ்ப்பள்ளிகளில் 13 ஆயிரத்தி​ற்கு மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில்

கெடா, மார்ச் 11 –

2024/2025 புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால்பதித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

​சீனப்பள்ளிகளில் இதர இனத்து மாணவர்களின் பதிவுடன் அப்பள்ளி தனது எண்ணிக்கையை தற்காத்துக்கொண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதலாம் ஆண்டில் நுழைந்த 16 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் மாணவர்கள் சரிவை எதிர்கொாண்டுள்ளன.

வரலாற்றுப்பொருந்திய கெடா, கூலிம்,லாடாங் சுங்கை டிங்கின் தமிழ்ப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார் என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று தொட​ங்கிய கெடா மாநில புதிய கல்வியாண்டில் ​தேசியப்பள்ளி, ​சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 31 ஆயிரத்து 110 மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால் பதித்து இருப்பதாக கெடா மாநில கல்வி இலாகா இயக்குந​ர் Haji Othman தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2024/2025 கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 4 லட்சத்து 47 ஆயிரத்து 982 மாணவர்கள், பள்ளிக்கான் முன் உதவித் திட்டத்தின் ​கீழ் இந்த வாரத்தில் கல்வி உதவித் தொகையை பெறுவர் என்று கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 903 பள்ளிகளுக்கு 6 கோடியே 70 லட்சம் வெள்ளி நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்