SST வரி குறைக்கப்பட வேண்டும் அல்லது உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 7 –

கடந்த மார்ச் முதல் தேதியிலிருந்து SST விற்பனை, சேவை வரியை 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக அதிகரித்து இருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் அற நிறுவனங்களுக்கு அல்லது ஆலய நிர்வாகங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

SST வரி உயர்வு, அரசாங்கத்தின் நிலையான வருவாயை அதிகரித்து, பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்குவதாக இருந்தாலும்கூட, சமூக நல்வாழ்வு கண்ணோட்டத்தில் குறிப்பாக நாட்டில் சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் அறநிறுவனங்கள் அல்லது கோயில் நிர்வாகங்களுக்கு இது கடினமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஆலயத்தில் நடைபெறக்கூடிய சமய நடவடிக்கைகளுக்கு , பக்தர்கள் அளிக்கின்ற நன்கொடைகளையும், நிதி உதவிகளையும்தான் ஆலய நிர்வாகங்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளன. .

இந்நிலையில் ஆலய பயன்பாட்டிற்குரிய மின்சாரம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றுக்கு செலவிடக்கூடிய தொகை, SST வரி உயர்வினால் அதிகமாகும். இது மற்ற செலவினங்களுக்கான கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். .

இதனால் ஆலயங்களில் சமய நடவடிக்கைகள் சார்ந்த பணிகளை சரிவர செய்வதற்கான திறன் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் டத்தோ சிவகுமார் அச்சம் தெரிவித்துள்ளார்.

SST வரி 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டு இருப்பது, தண்ணீர், மின்சாரக் கட்டணங்கள் பெரியளவில் உயரக்கூடிய சாத்தியம் இருப்பது ஆலய நிர்வாகங்களுக்கு தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்..

இந்நிலையில், ஆலய நிர்வாகங்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் மறுப்பதற்கில்லை என்றாலும் SST உயர்வினால் மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாட்டிற்கான செலவின உயர்வில், அவற்றுக்கு கட்டணக் கழிவு அல்லது உதவித் தொகையை அரசாங்கம் வழங்குமானால் அது நாடு முழுவதும் உள்ள ஆலய நிர்வாகங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்