மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 23 –

பினாங்கு, பாலேக் பூலௌ வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் அளிக்க 450 வெள்ளி லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய அந்நபர் அரசாங்க துறையிடமிருந்து மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதை அங்கீகரிக்க பாதிக்கப்பட்டவரிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்ட அந்நபர் குறிப்பிடப்பட்ட தொகை கிடைத்த பின் அதில் தமக்கு ஒரு பங்கு தருமாறு கோரியுள்ளார்.

சந்தேகிக்கும் அந்நபர் கடந்த புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் பாலேக் பூலௌ வில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியிடமிருந்து லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக நேற்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அந்நபர் பிப்ரவரி 27 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்