செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 20 –

அண்மையில் இரு போலீஸ் உறுப்பினர்கள் தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்த செய்தி வாசிப்பாளரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என மனித உரிமை அமைப்பான Lawyers for Liberty அமைப்பின் ஆலோசகர் ன்.சுரென்டரன் சாடினார்.

சம்பந்தப்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டும். அவரை தண்டிக்கும் வகையில் செயல்படுவதைவிட, அவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு போலீஸ் ஏற்புடைய வகையில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை விடுத்தார்.

போலீசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைப்பது எப்போதிலிருந்து ஒரு குற்றச்செயலாக ஆனது? Subang Jaya போலீஸ் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வியப்பளிப்பதாகவும் ன்.சுரென்டரன்கூறினார்.

கடந்த 13ஆம் தேதி சுபாங் ஜெயா USJ 9-னிலுள்ள வீடமைப்பு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்திருந்த இரு போலீஸ் உறுப்பினர்கள், தம்மிடம் சோதனையை மேற்கொண்ட போது மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்