கோம்பாக் மக்கள் பரிவு தினம் – 5,000 பேர் பங்கேற்பு

இன்று நடைபெற்ற 2024 கோம்பாக் மக்கள் பரிவு தினம் மற்றும் தொழில் முனைவோர், கலாச்சார விழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Dewan Orang Ramai Kampung Melayu Wira Damai சமூக மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்து போட்டி மற்றும்  அரசு துறைகளின் கண்காட்சி முகப்புகள்  உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்றன.

மக்களை  நேருக்கு நேர் சந்திக்கவும் நட்பாக பழகவும்  பல்வேறு அரசு நிறுவனங்களின் திட்டங்களில் பதிவு செய்யவும்   இந்த திட்டம் உதவுகிறது என்று Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari கூறினார்.

PADU எனப்படும் மத்திய முதன்மை தரவுகள் பதிவு, சிலாங்கூர் குழந்தைகள் வாரிசான் அறக்கட்டளை (Yawas), செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்),  மற்றும் ஊழியர் சேம நிதி வாரியம்  ஆகியவை தங்கள் முகப்புகளை இந்நிகழ்ச்சியில் அமைத்திருந்தன. மேலும் இலவச மருத்துவ முகாமும் இங்கு நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்