கோலகுபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்கள் இந்தியர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

கோலகுபு பாரு, மே 14-

கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களின் ஆதரவு, பாரிசான் நேஷனலுடன் ஒத்துழைப்பு கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பானுக்கு அதிகரித்துள்ளது.

அதே வேளையில் சீனர்களின் ஆதரவு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மலாய்க்காரர்களின் ஆதரவு மூன்று விழுக்காடாகவும், இந்தியர்களின் ஆதரவு எட்டு விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது என்று டாருல் எஹ்சான் கழகத்தின் ஆய்வியல் தலைமை நிர்வாகி அரிபின் முகமது முனீர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆவது பொதுத்தேர்தலில் மலாய்க்காரர்கள், பக்காத்தான் ஹராப்பானுக்கு 39 விழுக்காடு ஆதரவை வழங்கிய வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு 55 விழுக்காடு ஆதரவை வழங்கியிருந்ததாக அரிபின் முகமது முனீர் சுட்டிக் காட்டினார்.

எனினும், கோலகுபுபாரு இடைத்தேர்தலில் 16 மாவட்டங்களில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையானராக கொண்ட வாக்காளர் நிறைந்த 4 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களை பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் கைப்பற்றியுள்ளன.

கம்போங் ஆயேர் ஜெர்னே பெர்டாக் ஆகிய இடங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் வாக்குகள் முறையே 49 விழுக்காடாகவும் 78 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வாளர் கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்