முன்னாள் சட்டத்துறை தலைவர் தோல்வி

புத்ராஜெயா, மே 14-

1MDB முறைக்கேடு தொடர்பில் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் – ங்கிற்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்வதற்கு அனுமதி கேட்டு முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ அபாண்டி அலி செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தேங்கு மைமுன் துவா மாட், அபாண்டி அலி -யின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங் -கிடம் ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கோரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபாண்டி அலி தொடுத்த இந்த அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அப்பீல் நீதிமன்றத்தில் அபாண்டி அலி செய்து கொண்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்