யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை மரணம்

கிளந்தான், மே 14-

கிளந்தான், போஸ்ட் ப்லாவ், கம்போங் ஓம் -மில் வங்காளதேச தொழிலாளி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவ தொடர்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் யானை மின்சார வேலி அமைப்பு நிறுவப்படாததே காரணம் என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட தோட்டத்து நிர்வாகத்திடமிருந்து வனவிலங்குகள் தொந்தரவு குறித்து எந்தவொரு புகார்களும் கிடைக்க பெறவில்லை என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் தலைவர் மொஹமட் ஹபீட் ரோஹானி தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திடமிருந்து கிடைக்க பெற்ற தகவலை அடுத்து, இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ள தமது தரப்பு தொடங்கியிருப்பதாக மொஹமட் ஹபீட் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அந்நிய பிரஜையான 29 வயது முஹம்மது நவ்ஷர் அலிமரம் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மொஹமட் ஹபீட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்