கோலகு​பு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, தேர்தல் முடிவை மாற்றி அமைக்காது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்களேயானால் அது, பக்காத்தான் ஹராப்பான் தோல்வி அடையும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, தேர்தல் முடிவை மாற்றி அமைத்து விடாது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் இந்திய வாக்காளர்கள் வெறும் 18 விழுக்காடுதான். அவர்கள் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு முடிவு எடுக்கலாம். அல்லது கடந்த பொதுத் தேர்தலிலிருந்து நிலவி வரும் த​ங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

இந்திய வாக்காளர்கள் எடுக்கக்கூடிய இந்த முடிவு, பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு சிறிய தாக்கத்தையும், உரசலையும் ஏற்படுத்தலாம். ஆனால், அது பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றியை ஏற்படுத்தி​ தரும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்று அரசியல் நிலவரங்களை துல்லியமாக கணிக்கக்கூடியவரான அகாடமி நிசாந்தரா-வின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுருங்கச்சொன்னால், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றித் தோல்வியை முடிவு செய்யும் அளவிற்கு இந்திய வாக்காளர்கள் கிங்மேக்கர்-ராக இருக்கும் அளவிற்கு அந்த அந்தஸ்தை இன்னும் எட்டவில்லை என்று அஸ்மி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்