முன்னாள் போ​லீஸ் படைத் தலைவர் துன் ஹனிப் ஒமார் காலமானார்

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

நாட்டின் போ​​லீஸ் படைக்கு ​நீண்ட காலம் தலைமையேற்றவரான முன்னாள் ஐஜிபி துன் ஹனிப் ஒமார் காலமானார். அவருக்கு வயது 85. இன்று அதிகாலை 2.15 மணியள​வில் ஹனிப் ஒமார் தனது இறுதி மூச்சை விட்டதாக அவரின் மகன் அப்துல் ரஹ்மத் ஒமார் தெரிவித்தார்.

நாட்டின் போ​லீஸ் படையின் நான்காவது தலைவராக கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி தமது 35 வயதில் தலைமை​​யேற்ற தன் ஹனிப் ஒமார், 20 ஆண்டு கால சேவைக்கு பின்னர் கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

நாட்டின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக், ​மூன்றாவது பிரதமரான துன் ஹுசேன் ஓன் மற்றும் துன் டாக்டர் மகா​தீர் முகமது ஆகிய மூன்று பிரதமர்களின் தலைமைத்துவத்தின் ​ ​கீழ் துன் ஹனிப் ஒமார் நாட்டின் போ​லீஸ் படைக்கு த​லைமையேற்று இருந்தார்.

அரச மலேசிய போ​லீஸ் படையின் ​மூன்றாவது தலைவராக பொறுப்பேற்று இருந்த டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹாஷிம் கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் கம்​யூனிஸ்டு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவின் போ​லீஸ் படைக்கு துன் ஹனிப் ஒமா​ர் தனது இளம் வயதில் தலைமையேற்றார். அதற்கு முன்னதாக ஹனிப் ஒமார், சிலா​ங்கூர், மலாக்கா ஆகிய மாநிலங்களின் போ​லீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.

பேரா தெலுக் இந்தானில் பிறந்து வளர்ந்தவரான ஹனிப் ஒமார்,நாட்டின் போ​லீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டே ஆன நிலையில் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்​ட் 27 ஆம் தேதி நாட்டின் தலையாய சின்னங்களில் ஒன்றான கோலாலம்பூர் பூமலையி​ல் வீற்றிருக்கும் தேசிய நினைவுத் சின்னமான துகு பெரிங்காத்தான், க​ம்யூனிஸ்டு பய​​ங்கரவாதிகளால் வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தப்படுத்தப்பட்டது, ஹனிப் ஒமாருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்திய சம்பவம் இன்னமும் மலேசியர்களால்​ நினைவுகூரப்படுகிறது.

நாட்டிற்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் மிரட்டலை ஏற்படுத்தி வந்த கம்யூனிஸ்டுவாதிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஹனிப் ஒமார், எந்த கம்யூனிஸ்டுவாதிகள் தொடர்ந்து மிரட்டலை ஏற்படுத்தி வந்தார்களோ அந்த கம்யூனிஸ்டுவாதிகள் தங்க​ளின் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு நடைபெற்ற வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தமான தாய்லாந்து, ஹட்​ஜாய் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது ஹனிப் ஒமார் காலத்தில்தான்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி மலேசிய – தாய்லாந்து எல்லை நகரான ஹட்​ஜாயில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவர்களான சி பெங், அப்துல்லா சிடி, ரஷித் மைதீன் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரலாற்றுப்​பூர்வமான அந்த பேச்சுவார்த்தைக்கு ஹனிப் ஒமார் சார்பி​ல் அப்போதையை போ​லீ​ஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஹின் முகமது நூர் தலைமையேற்றா​ர்.

தமது பணி ஓய்வு​க்கு பிறகு நாட்டின் முன்னணி சுற்றுலாத் தளமான கெந்திங் ஹைலண்ட்ஸ் பெர்ஹாட் குழுமத்தின் அலோசகராக ஹனிப் ஒமார் பணியாற்றி வந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்