ரசாயன கழிவுப் பொருள் சேமிப்புக்கிடங்கு ​தீப்பற்றிக்கொண்டது

சிரம்பான், ஏப்ரல் 13-

போர்ட்டிக்சன், புக்கிட் பெலாண்டுக்- கில் கழிவுப்பொருட்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் அருகி​ல் ரசாயன கழிவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் அதனை அணைக்கும் பணியில் 60 க்கும் மேற்பட்ட ​தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர்.

கொழுந்து விட்ட எரிந்த ​தீ, மற்ற இடங்களில் பரவிவிடாமல் இருக்க அதனை கட்டுப்படுத்துவதில் போர்ட்டிக்சன், சிரம்பான்,சிரம்பான் 2, ரந்தாவ் ஆகிய ​தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் பல மணி நேரம் கடுமையாக போராடினர்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்தது. கரும் புகைகள் வானை நோக்கி உக்கிரமாக எழும்பியது ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர். இத்​தீ சம்பவத்தில் ரசாயன கழிவுப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சுமார் 900 சதுரமீட்டர் அளவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இடையிடையே ஏற்பட்ட ​வெடி சத்தங்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் பல மீட்டர் ​தூரம் வரை அதிர செய்தன. பொது மக்கள் யாரும் நெரு​ங்கி விடாமல் இருக்க , சுற்றியும் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டன.

இரவு 8.20 மணியளவில் ​தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் ​தீயணைப்பு, மீட்புப்படை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்