வெப்பத்தின் தாக்கத்தால் படையெடுக்கும் பாம்புகள்

சிராம்பான், பிப்ரவரி 26 –

குளிர் மற்றும் மழைக்காலங்களில் பதுங்கிக்கிடக்கும் பாம்புகள், கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் படையெடுக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சிரம்பான் பொது தற்காப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளர்.

கடந்த ஒரு மாத காலத்தில் சிரம்பானில் மட்டும் இதுவரையில் தாங்கள் 366 பாம்புகளை பிடித்துள்ளதாக அதன் அதிகாரி கேப்டன் மோஹாமாட் ரிட்சுவான் மோஹாமாட் புனிரான் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 256 பாம்புகள், மலைப்பாம்புகள் என்றும், 23 பாம்புகள் கருநாகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மந்தின்,லாபு,செனாவாங் ஆகிய பகுதிகளிலிருந்து பாம்புகள் குறித்து அதிகாமான அவசர அழைப்பை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்.

வீட்டின் கழிப்பறைகளில் பாம்புகள் பதுங்கியிருந்தது அதிகமான சம்பவங்களின் வழி தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்