கோல குபு பாரு இடைத்தேர்தலில், இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளரை ஆதரிக்க வேண்டாமென கோரிக்கை.

கோல குபு பாரு, ஏப்ரல் 19-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்திவரும் பக்காத்தான் ஹாராப்பான்- டிஏபி தலைமையிலான வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்கக்கூடாது என உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியான பேரிக்காதான் நசியனாலுடன் உரிமை கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதால் அக்கூட்டணிக்கு வாக்களிப்பதும் வாக்களிக்காததும் அவரவர் முடிவுக்கே
விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

நடப்பு அரசாங்கத்தில் இந்திய சமூகத்திற்கு எவ்வித பலன்களும் இல்லை் என்றும் அச்சமூகத்தினரின் சமூக-பொருளாதாரத்தை உயர்த்த அளித்திருந்த பல வாக்குறுதிகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவேற்றவில்லை என்றும் ராமசாமி சாடினார்.

பூமிபுத்ராக்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குகின்ற அவர், இந்திய சமூகத்திற்கு அற்பமான நிதியை வழங்குகின்றார் என்று மேலும் குற்றச்சாட்டி உள்ளார்

ஆகவே, கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பிரதமருக்கு பாடம் புகட்டும் வண்ணம், ஆளும் அரசாங்கத்தின் வேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடாது என தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்