ருவாங் எரிமலை வெடிப்பினால், 25 மீட்டர் உயரம் வரையில் சுனாமி அலை எழலாம்!

ஜகார்த்தா, ஏப்ரல் 19-

இந்தோனேசியா, வட சுலவேசியிலுள்ள ருவாங் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, சுமார் 25 மீட்டர் உயரம் வரையில் சுனாமி அலைகள் எழுவதற்கான சாத்தியம் உள்ளதாக, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை சுனாமி அலைகள் எழுந்தால், தகுலாண்டாங் தீவின் மேற்கு பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதோடு மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் அது கூறியுள்ளது.

கடந்த 1871ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ருவாங் எரிமலை வெடிப்பினால், தகுலாண்டாங் கடலில் சுனாமி அலைகள் 25 மீட்டர் உயரம் வரையில் எழுந்திருந்ததோடு, 400 பேரின் உயிரை பலி கொண்டது என அச்சம்பவத்தை மேற்கோள்க்காட்டி, இந்தோனேசியா-வின் எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சு அவ்வாட்டாரத்திற்கு ஏற்படப்போகின்ற பாதிப்புகளைக் கணித்து செய்தி வெளியிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்