கோல குபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி-யின் பெரும்பான்மை சரியும்!

ஷாஹ் அலாம், ஏப்ரல் 22-

சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், டிஏபி கட்சி பலத்த சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில், அத்தொகுதி பெற்றிருந்த 4 ஆயிரத்து 119 பெரும்பான்மை வாக்குகளில், இவ்வாண்டு குறைந்தது ஆயிரம் வாக்குகளாவது குறையும் என மாநில டிஏபி பொருளாளர் ஓங் கியான் மிங் கணித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியல் சூழல், பக்காத்தான் ஹாராப்பானுக்கு சாதகமாக இல்லை. தேர்தல் பரப்புரையை சரியான வியூகத்துடன் கொண்டு சென்றால் மட்டுமே, குறுகிய பெரும்பான்மையில் டிஏபி கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றாரவர்.

டிஏபி-யின் பெரும்பான்மை வாக்குகள் சரிவிற்கு பல காரணங்கள் உள்ளன. கழக சீர்த்திருத்தங்களில் தாமதம், நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறப்படும் கருத்துகள், வாழ்க்கை செலவின அதிகரிப்பு என ஒற்றுமை அரசாங்கத்தின் பலவீனங்களைக் காரணங்களாக கூறிவிட முடியாது.

கடந்த சில வாரங்களாக, அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை விவகாரத்தில், பக்காத்தான் ஹாராப்பான்- தேசிய முன்னணி தலைவர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து மோதல்கள், மலாய்காரர் அல்லாதவர்களிடையே கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக, வரக்கூடிய கோல குபு பாரு இடைத்தேர்தலில், வாக்களிக்க செல்லவிருக்கும் மலாய் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிவதற்கான வாய்ப்பு உள்ளதாக, ஓங் கியான் மிங் ஆருடத்தை வெளிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்