கோழிக்கடையில் கைவிடப்பட்ட சிசு

திரெங்கானு, மே 18-

பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று, இன்று அதிகாலையில் கோழி விற்பனைக் கடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திரெங்கானு, சுக்காய், ஜாலான் அயெர் புத்தேஹ், ஜபூர் குபுர் என்ற இடத்தில் உள்ள கோழிக்கடையில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கோழிக்கூடைகள் மத்தியில் அந்த 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை கிடந்தது, காலையில் கோழிகளை இறக்கும் பணியில் ஈடுபட்ட இருந்த லோரி ஓட்டுநர் கண்டு பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

அந்த குழந்தை உரிய மருத்துவப் பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 317 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்