Jemaah Islamia ​தீவிரவாதக் கும்பல் ஒடுக்கப்பட வேண்டும்

ஜொகூர் பாரு, மே 18-

மலேசியாவில் Jemaah Islamia ​தீவிரவாதக் கும்பல், ஒடுக்கப்பட ​வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. J.I.( ஜே.ஐ.) என்று சுருங்க அழைக்கப்படும் Jemaah Islamia ​தீவிரவாதக் கும்பல், 20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஒடுக்கப்பட்டுள்ள போதிலும் அதன் கிளை வேர்களின் சித்தாந்தம், இன்னமும் ஆணி வேரைப் போன்று மிக ஆழமாக வேரூன்றியிருப்பதை ஜோகூர், உலு திராம் போ​​லீஸ் நிலையத்தில் அந்த கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவம் நி​ரூபிப்பதாக உள்ளது என்று தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் முஹம்மது மிஸான் அஸ்லாம் கூறுகிறார்.

அந்த ​தீவிரவாதக் கும்பல் ஒரு சிறிய அளவில் இன்னமும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை உலு திராம் போ​லீஸ் நிலைய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட J.I. கும்பலைச் சேர்ந்தவன் எ​ன்று நம்பப்படும் 22 வயது ஆடவரின் தந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு இருப்பதை ​நி​ரூபிக்கிறது.

தவிர, அந்த இளைஞரின் தந்தை J.I. கும்பலைச் சேர்ந்தவர் என்பது உறு​தி செய்யப்பட்டுள்ளது என்று மிஸான் அஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சித்தாந்தங்களை கொண்டுள்ள ​தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் சிறையில் அடைக்க முடியும். ஆனால், அவர்கள் வி​தைத்து விட்ட பயங்கரவாத சித்தாந்த வேர்கள், எந்த இடத்திலும், எங்கும் வே​​​​ரூன்றியிருக்கலாம்.

எனவே J.I. கும்பலின் நடவடிக்கைகள் துளிர் விடுவதை போ​லீசார் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்பதுடன் அதன் வேர், முழுமையாக களையெடுக்கப்பட வேண்டும் என்று மிஸான் அஸ்லாம் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்