மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், மே 18-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபர் பகுதியில் நெடுங்காலமாக வீற்றிருக்கும் இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் மற்றும் திருப்பள்ளியறை சுவாமிகளுக்கான மகா கும்பாபிஷேகம் நாளை மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.01 க்கும் 11.01 க்கும் இடைப்பட்ட நேரத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் தமிழ் திருமுறையில் இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

மகா கும்பிஷேகத்தை முன்னிட்டு இன்று மே 18 ஆம் தேதி சனிக்கிழமை எண்ணெய் சாத்துதல் நிகழ்வு, வேள்ளி வழிபாடு, சிறப்பு வழிபாடு, பன்னிரு திருமுறை முற்றோதல் முதலிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.31 மணிக்கு நாட்டியாஞ்சலியுடன் திருக்குடங்கள் யாகசாலைக்கு புறப்படுதல் நிகழ்வுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்