21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவி மரணம்

பினாங்கு, மே 23-

தலைநகரில் தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவி ஒருவர் பினாங்கு, தஞ்சோங் பூங்கா-வில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் 21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை 3.35 மணியளவில் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய மாணவியின் உடல் பொதுமக்களால் கண்டறியப்பட்ட பின் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாணவி அந்த தங்கும் விடுதிக்கு சக ஆண் தோழருடன் சென்றதாகவும், அவ்விருவரும் அறைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்பதுடன் தரை தளத்தில் மக்கள் கூடியிருந்ததைக் கண்டு அவ்விடத்திற்கு சென்று பார்த்த போதுதான் அது தம்முடைய தோழி என்பதை உணர்ந்ததாக பாதிக்கப்பட்டவரின் தோழன் கூறியிருந்தார்.

இதில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு சாட்சியங்களும் இல்லாததால் இது ஒரு திடீர் மரணமே என்று விசாரணையில் தெரியவந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரஸ்லாம் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்