போதைப்பொருள் கடத்தியதாக தாய்லாந்து பிரஜை மீது குற்றச்சாட்டு

மெத்தம்பேட்டமைன் வகையை சேர்ந்த போதைப்பொருள் மாத்திரைகளை கடத்தியதாக தாய்லாந்து பிரஜை ஒருவர், லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

41 வயது விராசக் தியாலெக் என்கிற அப்பிரஜை மாஜிஸ்திரேட் நூருல் நடாஷா ரிசல் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அந்நபரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 39B (1)(a) மற்றும் 39B (2) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் 2.40 வரையில் லங்காவி, தெர்மினல் ஃபெரி லங்காவி யில் இக்குற்றத்தை புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்