சங்கம் எதிர்நோக்கும் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி

மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோகப் பொருள் மற்றும் மறுசுழற்சி சங்கம் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை உட்பட சங்கத்தின் சொந்த கட்டடத்தை சீரமைத்தல் மற்றும் இதர முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண எல்லா நிலைகளிலும் முயற்சிக்க போவதாக மிம்தா – வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோ ஶ்ரீ ஆறுமுகம் உறுதி பூண்டுள்ளார்.

மிம்தா – வின் 23 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று காலையில் பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் நடைபெற்றது. மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக, தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ நா. கோபாலகிருஷ்ணனின் முன்னிலையில் நடைபெற்றது.
உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட இந்த ஆண்டு கூட்டத்தில் தீபா மெட்டல் நிர்வன உரிமையாளரான மிம்தாவின் புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ ஆறுமுகம் சங்கத்தின் மேன்மைக்கு தமது தலைமையிலான புதிய நிர்வாக குழுவினருடன் இணைந்து எடுக்ககூடிய திட்டங்களை செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முன்னதாக உரையாற்றிய மைக்கியின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், உலோகப் பொருள் தொழில்துறையில் மற்ற துறைகளைப் போல தேவைக்கேற்று அந்நிய தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு கடந்த ஆண்டு வாய்ப்புகள் கைக்கூடின.

ஆனால், அந்த வாய்ப்புகள் அந்நிய தொழிலாளர்கள் மிகுதியின் காரணமாக இவ்வாண்டு முற்பகுதியில் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.

முக்கிய தொழில்துறையாக விளங்கும் உலோகத்தொழில்துறைக்கு தேவையான அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் மீண்டும் திறக்க வேண்டும் என்று தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

கடந்த 20 ஆண்டு காலமாக மிம்தாவை மிக சிறப்பான முறையில் வழிநடத்திய சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ கிருஷ்ணமூர்த்திற்கு சங்கத்தின் புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ ஆறுமுகம் தமது நன்றியையும் பாராட்டுகளையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்