சட்டவிரோதமாக செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன

ஶ்ரீ பெட்டாலிங், ஜாலான் ராடின் தெங்கா உட்பட பங்சார், ஜாலான் தெலாவி ஆகிய இடங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) – ளுடன் சேர்ந்து இதர அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையின் மூலம் பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டன.

இதில், நான்கு பொழுதுபோக்கு மையங்களில் உரிம விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகவும் மேலும், இரண்டு பொழுதுபோக்கு மையங்கள் அனுமதியின்றி செயல்பட்ட குற்றத்திற்காகவும் மூடப்பட்டதாக டி.பி.கே.எல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக மேலும் 11 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அது தகவல் வெளியிட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்