திடீர் சோதனையில் 20 வாகனங்கள் பறிமுதல்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகள் ஓப் மாபுக், சம்செங் ஜாலானன் திடீர் சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் ஜாலான் பூங்கா ராயா மற்றும் புக்கிட் அம்பாங் சௌஜானா ஆகிய இடங்களில் 80 வாகனங்கள் சோதனையிடப்பட்டதில் போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கப் பிரிவி உட்பட அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டவர்களின் 20 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இத்திடீர் சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லை, காலாவதியான சாலை வரி, பொருத்தமற்ற பதிவு எண், கண்ணாடி பொருத்தப்படாதது ஆகிய குற்றங்களுக்காக 96 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக முகமது ஆசம் கூறினார்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைகளுக்காக அம்பாங் ஜெயா போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்