சட்டவிரோதமாக செயல்பட்ட இந்திய வியாபாரிக்கு வெ.20,000 அபராதம்

ஈப்போ, மார்ச் 20 –

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவிரோதமாக மின்சார இணைப்பு வழங்குவதற்கு Tenaga Nasional Berhad (TNB) நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 6,500 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட வியாபாரி ஒருவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் 20,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

நீதிபதி Datuk Ibrahim Osman முன்நிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டப்பட்டுள்ள 39 வயதுடைய ர்.கெ சன்ட்ர சேகர்க்கு குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

Perak, Taiping -கை சுற்றியுள்ள வளாகத்தில் இருந்து மின்சாரத்தை எடுப்பதற்கும் அவர் மீது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கும் TNB அதிகாரிகளான 38 வயதுடைய ஷம்சுல் அரீபின் ரஹ்மான் மற்றும் 40 வயதுடைய மொகமாட் அஷ்ராப் மொகமாட் யூனுஸ் ஆகியோருக்கு 3,000 வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் தைபிங் கிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் இக்குற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்