பாதுகாப்பு மேற்பார்வையாளரை சுட்டு கொன்ற நபரை போலீசார் தேடல்

கிள்ளாங், மார்ச் 20 –

தகராறில் ஒரு பாதுகாப்பு மேற்பார்வையாளரை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி காப்பார் காப்பார் அருகிலுள்ள ஜாலான் மொக்தார் ரில் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும் அத்தகராறில் துப்பாக்கினால் பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டத்தில் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் கொலை செய்ததாக நம்பப்படும் நபரை போலீசார் வேட்டையாடி வருவதாக கூறப்படுகின்றது.

இதுக்குறித்து போலீசார் சாட்சியங்களை தேடி வருவதுடன் இச்சம்பவத்தின் போது குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் பயணித்து வந்த கார் போலீயான பதிவு எண்ணை கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP S விஜாயா ரௌ தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனையிட்டுள்ளதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் எந்தவொரு சாட்சியங்களும் இதுவரையில் கிடைக்க பெறவில்லை என்று விஜயா ரௌ Vijaya Rao தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட 46 வயதுடைய அவ்வாடவரின் வலது கை, தோள்பட்டை, உடல் ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்ததாகவும் போதைப்பொருள் எடுத்திருப்பது உட்பட அவர் மீது குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக Vijaya Rao அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்