சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய படகு பிடிபட்டது

நேற்று தஞ்சோங் துவான் கடற்பகுதியில், இந்தோனேசியாவச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை கடத்தி வந்த உள்நாட்டவரின் படகு ஒன்று, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையின் இயக்குநர் கேப்டன் மரிட்டிம் முகம்மட் கைரி அப்துல் அஸீஸ் குறிப்பிடுகயில், நண்பகல் 12.00 மணி அளவில் சிலாங்கூரின் கோல சுங்கை சிப்பாங் ஐ நோக்கி வந்த அந்தப் படகைச் சோதனையிட்டபோது இரு மலேசியர்கள், சரியான அடையாள ஆவணம் இல்லாத 49 வயது இந்தோனேசியவாசி ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டனர்

தடுத்து வைக்கப்பட்ட அணைவரையும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, Jeti Maritim Negeri Melaka dan Negeri Sembilan னுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்