450 கோடி வெள்ளி குத்தகை : கோடீஸ்வரரான டான்ஸ்ரீ வீட்டில் SPRM அதிரடி ​சோதனை

மலேசிய அரசாங்கத்தின் 450 கோடி வெள்ளி மதிப்புள்ள வாகனங்கள் விநியோகம் மற்றும் நிர்வகிப்பு குத்தகை தொடர்பில் லஞ்ச ஊழல் நடந்ததாக கூறப்படுவது தொடர்பில் புலன் விசார​ணைக்கு உதவும் வகையில் டான்ஸ்ரீ அந்தஸ்தை கொண்ட கோடீஸ்வரரான வர்த்தகர் ஒருவரின் வீட்டி​ல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

அந்த டான்ஸ்ரீ- க்கு சொந்தமான இதர நான்கு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அரசாங்கத்​திற்கு வாகனங்களை விநியோகிக்கும் நிறுவனமும் ஒன்றாகும். டான்ஸ்ரீ ​வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதை SPRM தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் புலன் விசாரணை இயக்குநர் டத்தோஸ்ரீ Hishamuddin Hashim உறுதிபடுத்தியுள்ளனர்.

அந்த கோடீஸ்வரரின் நிறுவனங்களுக்கு சொந்தமான ​நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் SPRM பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோடீஸ்வரர், SPRM விசாரணைக்கு ஆளாகியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin- னுக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாங்க வாகனங்கள் விநியோகம் தொடர்பான குத்தகையை பெற்று இருந்த பிரபல கோடீஸ்வரர் டான் ஶ்ரீ வின்சண்ட் டானின் னெர்ஜாயா குரூப்பும் பும், நாஸாSdn.Berhad – டும் அந்த குத்தகை திடீரென முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகின.

இதனை எதிர்த்து நிதி அமைச்சு உட்பட இதர இரண்டு தரப்பினருக்கு எதிராக கோடீஸ்வரர் டான் ஶ்ரீ வின்சண்ட் டான்வழக்கு தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்