சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது

கோலாலம்பூர்- 24 மார்ச்


கோலாலம்பூர் தலை நகரத்தில் செயல்பட்டு கொண்டிருந்த சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்த குற்றவியல் இலாகாவை சேர்ந்த தலைமை அதிகாரியுடன் அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட லஞ்ச ஊழல் விசாரணைக்காக மலேசிய ஊழல் ஆணையம் தடுத்து வைத்துள்ளது என கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் உறுதிப்படுத்தினார்.

மலேசிய ஊழல் ஆணையம் நடத்தி வரும் லஞ்ச ஊழல் விசாரணையில் மலேசிய போலீஸ் படை தலையிடாது என்றும், விசாரணைக்கு உட்படுத்தி உள்ள போலீஸ்காரர்களின் முழுமையான விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

20 லட்ச பணமும் தங்களின் சக்திக்கு மீறிய சொத்துகளும் அவர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதால், முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்ததுடன் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அலாவுடின் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்