சட்டவிரோத ‘ஹலால்’ சின்னங்களை பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்

தைப்பிங், மார்ச் 22.

தைப்பிங்கில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக ‘ஹலால்’ சின்னத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்ததற்காக 208 உணவு பொருட்களை பேரா, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் பறிமுதல் செய்தனர்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் பெருசாஹான் ரிங்கான் துப்பாய் பகுதியில் தைப்பிங் கே.பி.டி.என் – னை சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட இச்சோதனையில் அப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான ‘ஹலால்’ சரிபார்ப்பு சான்றிதழ் கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே காலாவதியான நிலையில் அவ்வளாகங்கள் இன்னமும் பொருட்களை பேக்கேஜிங் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்யப்பட்டதாக கமாலுடின் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 5 லட்சம் வரையில் அபராதம் மற்றும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றத்திற்காக ஒரு மில்லியன் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று கமாலுடின் இஸ்மாயில் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்