சட்டவிரோத 960,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

கோத்தா பாரு, ஏப்ரல் 03-

சட்டவிரோதமான சிகரெட்டுகளை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சிண்டிகேட்டுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கிளந்தான், பன்த்தாய் சஹாய புலான் – னில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 960,000 சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக கிளந்தான் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் கூறினார்.

7 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான சிகரெட்டுகள் உட்பட அதற்கு செலுத்தப்படாத வரிகள் ஆகியவை கம்போங் கீஜாங்-கில் உள்ள சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஜெட்டியில் கைப்பற்றப்பட்டதாக வான் ஜமால் அறிவித்தார்.

சிண்டிகேட்டுகள் சட்டவிரோத ஜெட்டியை பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட சிகரெட்டுகளை கடத்தியதாகவும் இச்சோதனையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் வான் ஜமால் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்