சந்தாதாரர்களின் கணக்குகள் சீரமைக்கப்படவிருக்கிறன

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, தனது சந்தாதாரர்களின் சேமிப்பு கணக்குகளை இம்மாதம் இறுதியில் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EPF சந்தாதார்கள் அனைவரும் இரண்டு கணக்குகளை கொண்டிருக்கின்றனர். இம்மாதம் இறுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் சீரமைப்பின் வழி 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து சந்தாதாரர்களும் மூன்று கணக்குகளை கொண்டிருக்க வேண்டும்.

முதலாவது கணக்கு Persaraan என்ற பணி ஓய்வுப்பெறும் காலத்திற்குரிய கணக்காகும். அந்திம காலத்திற்கு தேவையான பணத்தை மீட்க மட்டும் இந்த கணக்கு பயன்படுத்தப்படும்.

இரண்டாவது கணக்கு Sejahtera என்ற நல்வாழ்வுக்குரிய கணக்காகும். சந்தாதார்களின் நல்வாழ்வுக்குரிய திட்டத்தை இந்த கணக்கு கொண்டு இருக்கும்.

மூன்றாவது கணக்கான Account 3, நெகிழ்வான கணக்காகும். அத்தியாவசியத் தேவைக்கு பணத்தை மீட்கும் கணக்காக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று கணக்குகளின் விவரங்களையும், அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு இருப்பதையும், அவற்றின் நோக்கம் யாவை என்பது குறித்தும் இம்மாதம் இறுதியில் EPF. முழுமையாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இரண்டு கணக்காக இருக்கும் EPF. சந்தாதார்களின் கணக்குகள், 55 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மூன்று கணக்காக மாற்றவதற்கான திட்டத்தை வரும் மே 11 ஆம் தேதி EPF. அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55 வயதுக்கு உட்பட்ட சந்ததாதார்களுக்கு தற்போது உள்ள இரண்டு கணக்குகளில், அவர்களின் 70 விழுக்காடு சேமிப்பு முதல் கணக்கிலும், எஞ்சிய 30 விழுக்காடு சேமிப்பு இரண்டாவது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டு கணக்குகள் மூன்று கணக்குகளாக சீரமைக்கப்படும் போது, அவர்களின் சேமிப்பு, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. முதல் கணக்கில் 75 விழுக்காட்டுத் தொகையும், இரண்டாவது கணக்கில் 15 விழுக்காட்டுத் தொகையும், மூன்றாவது கணக்கில் 10 விழுக்காட்டுத் தொகையும் என அவர்களில் சேமிப்பு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவிக்கின்றன.

இதனை விவரத்தை EPF வாரியம், இம்மாதம் இறுதியில் அறிவிக்கவிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்