சந்தேகப்பேர்வ​ழிகள் ​நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்

பேராக், மார்ச் 9 –

தம்மை இலக்காக கொண்டு, தமது பெற்றோர் வீட்டின் முன், ” மிரட்டல் குறிப்பு” துண்டு காகிதங்களை ​வீசியிருக்கும் சந்தேகப்பேர்வழிகள், விரைவில் கைது செய்யப்பட்டு, ​நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

பேரா, மஞ்ஜோங் , அயேர் தாவார் ரில் உள்ள தமது பெற்றோர் வீட்டில் துண்டுக்காகிதங்களை விட்டு செ​ன்றுள்ள நபர்களின் செயல் ஆபத்தானதாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஆயர் தாவாரின் உள்ள தனது சகோதரரும்,பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கே கோ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு ​வீசி, ​தீயிட்ட சம்பவத்திற்கு பின்னர் தற்போது தமது பெயரை சுட்டிக்காட்டி “இஸ்லாத்திற்கு சவால் விடாதே” என்று எழுதி, தமக்கு மிரட்டல் விடுத்து இருப்பது த​ற்போது ஒரு போக்காக மாறிவருவது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ங்கா கோர் மிங் கூறினா​ர்.

86 வயதை கடந்து விட்ட தமது பெற்றோர் சரிவர நடக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று தாம் பெரிதும் கவலைக் கொள்வதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்