சபா, சரவாக்கை இதர மலேசியாவாக வகைப்படுத்தும் பரிந்துரைக்கு எதிர்ப்பு

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

சபா, சரவாக்கில் இன பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அவ்விரு மாநிலங்களையும் இதர மலேசியா என அடையாளப்படுத்தப்பட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் அல்லா சொல் கொண்ட காலுறை விவகாரம் பெரும் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளதைத் தொடர்ந்து, சரவாக்,கூச்சிங்-ங்கில் உள்ள KK மார்ட் கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பில், உப்கோ கட்சியைச் சேர்ந்த வில்ப்ரெட் மாடியுஸ் தங்காவு அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார். அவரது அப்பரிந்துரையை அவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த இரு தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

அந்த பரிந்துரை, நாட்டில் சபா, சரவாக்-க்கின் பங்களிப்பை பிரதிபலிக்கவில்லை என கூறியுள்ள டிஏபி-யைச் சேர்ந்த Bandar Kuching நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ, அவ்விரு மாநிலங்களும் ஒட்டுமொத்த மலேசியாவை வழிநடத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

காலுறை விவகாரத்தின் உணர்வுபூர்வ நிலையை தாங்கள் அறிந்திருந்தாலும், பொருளாதார மறுகட்டமைத்தல், சிறந்த முறையில் நாட்டை நிர்வகித்தல் உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

அதே கருத்தை முன்வைத்த வாரிசான் கட்சி உதவித் தலைவர் ஜுன்ஸ் வோங், அரசியல்வாதிகள் காலுறை போன்ற விவகாரத்தைவிட, நாட்டிற்கு நன்மையளிக்கக்கூடிய விவகாரங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே, மலேசியா முன்னோக்கி செல்லும் என அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்