MyDigital ID தளத்தில் ஊடுருவல்கள் நிகழாது!

புத்ராஜெயா, ஏப்ரல் 04-

அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் MyDigital ID இலக்கவியல் அடையாள தளம், பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அது சம்பந்தப்பட்ட தளம், தரவுகளை காலியாக வைத்திருக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அதில் புகுத்தப்படும் எந்தவொரு தரவும் ரகசியம் காக்கப்படும் என்பதால், வருங்காலத்தில் அது ஊடுருவலுக்கு இலக்கானாலும், எவ்வித பாதிப்புகளும் இருக்காது.

ஊடுரவல்காரர்களே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள் என MyDigital ID நிறுவனத்தின் தீர்வு பிரிவுக்கான தலைமை அதிகாரி ரிட்ஸ்வான் அப்துல்லாஹ் கூறினார்.

MyDigital ID திட்டம் பயன்பாட்டாளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்தக்கூடிய ஒரேயொரு தளமாக விளங்கவுள்ளது. அந்த தளத்தினுள் அரசாங்கத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்