சபா நாயகருக்கு கடிதம் இன்னும் அனுப்பப்படவிலை

கோலாலம்பூர், ஏப்ரல் 13-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததற்காக பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற எம்.பி.க்கள் நிலை குறித்து மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல்- க்கு இன்னும் கடிதம் அனுப்பவில்லை என்று அக்கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டீ தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் நோன்புப்பெருநாளை கொண்டாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று ரொனால்ட் கியாண்டீ குறிப்பிட்டார்.

பெர்சத்து கட்சியை பொறுத்தவரையில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இடங்கள் காலியாகி விட்டது. இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அவர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

கட்சியை விட்டு நீக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை இயல்பாகவே காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் கட்சியின் அமைப்புச் சட்ட விதியில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS, அண்மையில் அங்கீகரித்து இருப்பதை ரொனால்ட் கியாண்டீ சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்