பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 13-

நோன்புப்பெருநாளின் நான்காவது நாளான இன்று சனிக்கிழமை பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோன்புப்பெருநாளுக்கு தங்கள் கிராமங்களுக்கு சென்றவர்கள், கோலாலம்பூருக்கும், இதர பகுதிகளுக்கும் திரும்பத் தொடங்கியிருப்பதால் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான லெம்பாக லேபுஹ்ராயா மலேசியா தெரிவித்துள்ளது. .

வாகனங்கள் அதிகரிப்பு காரமணாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலைக்கு அப்பாற்பட்டு, கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான லேபுஹ்ராயா கோலாலம்பூர்– காராக் – நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூரை நோக்கி காராக்- கிலிருந்து பென்த்தோங் வரையில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. இதேபோன்று புக்கிட் திங்கி-யிலிருந்து கெந்திங் செம்பாஹ் மற்றும் கொம்பாக் டோல் சாவடி வரையிலும் வாகனகங்கள் மெதுவாக நகர்கின்றன என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்