சமூக ஊடகங்களை முடக்குவதற்கு பதிலாக தேசப்பற்றை விதையுங்கள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 03-

நாட்டு மக்களிடையே இனவாத போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், சமூக ஊடக தளத்தில் சிலவற்றை முடக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென குற்றவியல் நிபுணர் ஷாஹுல் ஹமீத் அப்த் ரஹீம் அண்மையில் ஆலோசனை விடுத்திருந்தார்.

அவரது அந்த ஆலோசனை, இனவாத பிரச்னைகளைக் களைவதற்கு ஒருபோதும் உதவாது என தொடர்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கருத்துரைத்துள்ளனர்.

3R எனப்படும் இனம், சமயம், ஆட்சியாளர் ஆகியவற்றை உட்படுத்திய இனவாத விவகாரங்களை, சமூக ஊடகங்கள் அல்லது பொது ஊடகங்கள் வாயிலாக களைய அரசாங்கம் முயற்சிக்க வேண்டுமென மாறா பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் நூற் நிர்வாண்டி மாட் நோர்டின் வலியுறுத்தினார்.

சமூக ஊடக பயனர்களிடையே அரசியலைமைப்பு மற்றும் தேசிய கோட்பாட்டை முன்னிறுத்தி தேசப்பற்றை விதைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நாட்டின் அடையாளத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள வழி செய்வதோடு, சிந்தனையாளர்களுடன் அரசாங்கம் கைக்கோர்க்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் சீர்த்திருத்த அமைப்பான பெர்சேஹ்-வின் நிர்வாக இயக்குநர் ஓய் கோக் ஹின் கூறுகையில், சமூக ஊடகங்களை முடக்குவதால் பேச்சுரிமை பறிக்கப்படுவதோடு, அந்த தளங்களை நம்பியே வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல மலேசியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்