சம்பந்தப்பட்ட ஆசிரியரை முன்பாகவே பணி நீக்கம் செய்யப்படாதது ஏன்? கல்வி அமைச்சரை கேள்வி எழுப்புகிறார் ஜேம்ஸ் நாயாகம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7 –

17 வயதுடைய மாணவனுடன் ஆசிரியர் ஒருவர்
உறவில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கடந்த டிசம்பர் மாதத்திலேயே பணிநீக்கம் செய்யாமல் இருந்தது ஏன் என்று குழந்தை உரிமை ஆர்வலரான ஜேம்ஸ் நாயாகாம் கேள்வி எழுப்பியு‌ள்ளா‌ர்.

மாணவரிடம் தவறான முறையில் பழகும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்வதால் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று சுரியானா வெல்வார் சொசித்தி யின் தலைவரும் ஆன ஜேம்ஸ் நாயாகாம் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதத்திலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இத்தகைய செயல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட மறுகணமே அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக இடமாற்றம் அல்ல.

ஒவ்வொரு முறையும் பள்ளி மாணவர்களிடம் துஷ்பிரயோகம் புரியும் ஆசிரியர்களை கல்வி அமைச்சகம் இடை மாற்றமே செய்ய முற்படுகின்றனர் என்று ஜேம்ஸ் நாயாகாம் சுட்டி காட்டினார்.

ஆசிரியரின் பணித்தன்மை கற்றல், கற்பித்தல் என்பதுடன் நின்றுவிடாமல் அவர்களின் நன்னடத்தையும் அவசியமான ஒன்றாகும் என்றார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் வெளியிட்டிருந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஜேம்ஸ் நாயாகாம் இவ்வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்