சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக போலீசில் புகார்

கோலாலம்பூர், மார்ச் 21 –

இந்து சமயத்தில் ஆன்மிக நெறியான சைவ சமயத்தின் வழிபாட்டு நாயகன் சிவபெருமானின் திருவுருவமான சிவலிங்கத்தை சிறுமைப்படுத்தி, இந்து சமயத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் மதம் மாறிய நபரான சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக கிள்ளான் வாழ் மக்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

உலகெங்கும் வாழும் இந்துக்கள் அண்மையில் சிவபெருமானின் உன்னத விழாவான சிவராத்திரி விழாவை கொண்டாடிய வேளையில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் காணொளியில் பேசியுள்ள சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகர் ஆறுமுகம் செல்லப்பா தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் இன்று கிள்ளான் செலத்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

சிவலிங்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள சம்ரி வினோத் காலிமுத்து, தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் செல்லப்பா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்