நிறுவனத்திற்கு இரண்டு வார கால அவகாசம்

நெகிரி செம்பிலான், மார்ச் 21 –

நெகிரி செம்பிலான், ஜெம்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட Rompin- னில் செயல்பட்டு வரும் Great Platform Sdn. Bhd. நிறுவனத்தில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் அரசாங்க ஏஜென்சிகளின் அமலாக்க அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகாவுடன் ஜெம்புல் மாவட்ட மன்றம், குடிநுழைவுத்துறை, போலீஸ்படை, பெர்கேசோ மற்றும் டோஸ்ம் எனப்படும் மலேசிய புள்ளி விவர இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மிக மோசமான சூழலில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

மிக அசுத்தமான நிலையில், அருவருக்கத்தக்க சூழலில் உள்ள அந்த குடியிருப்புகள் நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகா நிர்ணயித்துள்ள நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்வதாக இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். .

இதன் தொடர்பில் ஆள்பல இலாகாவினால் அங்கீகரிக்கப்பட்ட CLQ தங்கும் மையத்திற்கு அந்நியத் தொழிலாளர்கள் அனைவரும் இன்னும் இரண்டு வாரத்திற்கு இடம் மாற்ற செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்.சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்