சரவாக் மாநில முன்னாள் ஆளுநர் நல்லடக்கச் சடங்கு / ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை

கூச்சிங், பிப்ரவரி 22 –

சரவா மாநில மக்களிடையே ஒற்றுமையை விதைப்பதிலும், மாநிலத்தை பொருளியல் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர் என்று வர்ணிக்கப்பட்ட மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ஆளுநருமான காலஞ்சென்ற துன் அப்துல் தைப் மஹ்மூத் டின் நல்லடக்கச் சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

காலை 7.50 மணியளவில் அப்துல் தைப் மஹ்மூத் டின் நல்லுடல் கூச்சிங்கில் உள்ள சரவா மாநில சட்டமன்றக் கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடன் அவரின் புதல்வர்களான சுலைமான் அப்துல் ரஹ்மான் தாயிப், மஹ்மூத் அபு பெகிர் தைப் மற்றும் ஹனிஃபா ஹஜர் தைப் காணப்ப்டடனர்.

தைப் மஹ்மூத் பின் நல்லுடலை தாங்கிய பிரேதப்பெட்டியை மலேசிய இராணுவப்படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள், சுமந்த வண்ணம், சரவா சட்டமன்றக் கட்டடத்தின் எட்ரியம் மண்டபத்தில் ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் வைத்தனர்.

முதலமைச்சர் என்ற முறையில் தமது 33 ஆண்டு கால சரவாக் மாநில ஆட்சியில் தன்னுடன் தைப் மஹ்மூத் இரண்டறக் கலந்த ஒரு நில அடையாளமாக விளங்கிய சரவாக் சட்டமன்றக் கட்டடத்தில் ட்டின் நல்லுடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டது.

காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரையில் பொது மக்கள் வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரின் நல்லுடல், டேமாக் ஜெயா வில் உள்ள தமது குடும்ப மையத்து கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக சிறப்பு பிரார்த்தனைக்காக மஸ்ஜிட் டேமாக் பள்ளி வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நவீன சரவாக்கின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட தைப் மஹ்மூத் மூப்பின் காரணமாக நேற்று அதிகாலை 4.40 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்